
கடந்த முன்று நாட்களில் நாம் இரண்டு செய்திகளை ஒன்றாக படித்திருப்போம் அது பணத்திற்கு என்று நடந்த இரண்டு கொலைகள்.
முதலாவது ஒரு ஏழு வயது சிறுவனை இரக்கம் இல்லாமல் 5 லட்ச ரூபைக்காக இரண்டு பேர் (ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்) கொலை செய்து உள்ளார்கள்.
இரண்டாவது செய்தி பெற்ற மகனை கொன்ற தாய் மற்றும் அவரது கள்ள காதலன், காரணம், மகன் இந்த செய்தியை அடுத்தவிரிடம் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி உள்ளான் என்ற காரணம் தான் அது.
இந்த செய்திகளில் பணம் என்ற காரணம் காட்டப்பட்டுள்ளது, ஆனால் கொலை செய்த நான்கு பேருமே முறை தவறி நடந்த உறவை கொண்டவர்கள் மேலும் அவர்கள் கள்ள காதலர்கள், தங்கள் உறவை மேலும் புதுபித்துகொள்ள அவர்களுக்கு பணம் என்ற காரணத்தை காண்பித்து கொலை செய்து உள்ளார்கள்.
இன்று தொலைக்காட்சி பெட்டிகளில் காண்பிக்க படும் அனைத்து தொடர்களும் கள்ள காதலை வெளிப்படையாக காண்பிக்க படுகிறது. அது ஒரு தவறு என்று 900 நாட்களுக்கு அல்லது 5 வருடங்களுகு அப்போருமோ சொல்கிறார்கள், இது எப்படி இருக்கிறது என்றால் இலங்கை பிரச்சினையால் தமிழ் மக்கள் அனைவரும் கடந்த பல வருடங்களாக பாதிக்கப்படும் பொது தலையிடாத மற்றும் தட்டி கேட்காத இந்தியா அரசு இப்போது உதவிகளை உடனடியாக செய்ய வலியுருதவது போல் உள்ளது.
எனக்கு நன்றாக புரிகிறது, நீ என்ன சொல்ல வர அப்படிகிறந்த ஒலங்க ஒரு வரியல சொல்லிட்டு ஓடி போய்டு, அத விட்டுட்டு கள்ள காதல், பணம் அப்பறம் நாங்களே மறந்து போன இலங்கை இதையல்லாம் எதுக்கு இழுக்கிறே.
இப்பவே இங்கயே நான் இதை முடிக்காட்டி நீங்க அடுத்த பிளாக்கர் பக்கம் போய்டுவிங்க, அதுனால நான் என்ன சொல்ல வரேனே அதாங்க நாட்டமை தீர்ப்பு என்னன்ன கள்ள காதல் தப்பு தப்பு தப்பு ......